Home Featured இந்தியா சுஷ்மாவுக்கு சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல்!

சுஷ்மாவுக்கு சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல்!

702
0
SHARE
Ad

sushmaபுதுடெல்லி – சிறுநீரக செயலிழப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு சிறுநீரகம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது.

சுஷ்மாவின் இரத்த பிரிவு ‘பி பாசிட்டிவ்’ என்பதால் அவரது நெருங்கிய உறவினர்களிடமிருந்து சிறுநீரகம் பெற பரிசோதனைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், அவரது நெருங்கிய உறவினர்களின் சிறுநீரகங்கள் சுஷ்மாவுக்குப் பொருந்தவில்லை என பரிசோதனைகளுக்குப் பிறகு எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இதனால் சிறுநீரக தானம் தரத் தயாராக உள்ளவர்களை அழைத்துப் பரிசோதனைகள் நடத்தி வருகின்றனர் எய்ம்ஸ் மருத்துவர்கள்.

இதனிடையே, ராகுல் வர்மா என்பவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், தான் பி பாசிட்டிவ் இரத்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், சுஷ்மாவுக்கு சிறுநீரகம் தரத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.