மேடையை அதிரச் செய்யும் ராக் இசையில் உருவாகியுள்ள அப்பாடல், கடந்த 16 ஆண்டுகளாக அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் என்ற பாடல்திறன் போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருவதைக் குறிக்கும் வகையிலும், என்றும் ‘இளமையும், புத்துணர்ச்சியுமாக’ இருப்பதையும் குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
இப்பாடல் உருவான விதம் குறித்து ஜெய் கூறுகையில், இப்பாடல் ராக் இசையில் வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் துள்ளலான இசையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது எங்களின் கூட்டு முயற்சி. இதில் மிகவும் ஆர்வத்தோடு பாடியுள்ள எங்கள் குழுவைச் சேர்ந்த கலைஞர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களால் தான் இப்பாடல் மிகச் சிறப்பாக வந்துள்ளது” என்று தெரிவித்தார்.
அதோடு, இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 6 போட்டியாளர்களான அலெக்ஸ் ராவ் ராஜூ, குமரேஷ் கமலக்கண்ணன், நாராயினி பாலசுப்ரமணியம், போமதிபிரியா சுரேஷ், சிந்திஹஸ்னி ஆறுமுகம் மற்றும் ரூபன் ராஜ் சாமுவேல் ஆகியோருக்கு ஜெய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நாளை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றின் நேரடி ஒளிபரப்பை அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி (231), அஸ்ட்ரோ வானவில் (201) மற்றும் அஸ்ட்ரோ ஒன் தி கோ-வில் கண்டு களிக்கலாம்.