கோலாலம்பூர் – பெர்சே அலுவலகத்தில் நடந்த அதிரடி சோதனைகளைத் தொடர்ந்து, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவும், பெர்சே அலுவலகத்தைச் சேர்ந்த மண்டீப் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ள வேளையில், 10 கணினிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பெர்சே அலுவலகப் பணியாளர்களின் சம்பள விவரங்கள், வங்கிக் கணக்கு ஆவணங்களும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் காவல் துறையின் பெட்டாலிங் ஜெயா தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என பெர்சே 2.0 டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.