Home Featured உலகம் ‘இடியினால் ஏற்படும் ஆஸ்துமா’ – மெல்பர்ன் நகரில் 2 பேர் பலி!

‘இடியினால் ஏற்படும் ஆஸ்துமா’ – மெல்பர்ன் நகரில் 2 பேர் பலி!

783
0
SHARE
Ad

78433177

சிட்னி – ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ‘இடியினால் ஏற்பட்ட ஆஸ்துமா’ காரணமாக இரண்டு பேர் மரணமடைந்திருப்பதோடு, ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவிகளை நாடியுள்ளனர் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

‘இடியினால் ஏற்படும் ஆஸ்துமா – Thunderstorm asthma’ என்பது தூசியினால் ஏற்படும் ஒருவித அலர்ஜி. இடி இடித்தவுடன் காற்றின் ஈரப்பதமோ அல்லது மழையோ மகரந்தத் துகள்கள் வெடிக்கக் காரணமாக இருக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மிகச் சிறிய துகள்கள் காற்றில் பரவி சுவாசக் கோளாறை ஏற்படுத்துகின்றன.

#TamilSchoolmychoice

நேற்று திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட அது போன்ற நிகழ்வினால், இரண்டு பேர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி மரணமடைந்தனர்.

ஆனால், அவர்கள் இறந்ததற்கான உண்மையான காரணம் இன்னும் உறுதியாகவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை சுவாசப் பிரச்சினை என்று மட்டுமே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“இந்த மரணங்கள் அப்படி ஒரு நிகழ்வால் தான் ஏற்பட்டதா? என்பது தெரியாது. இந்தச் சம்பவத்தை நாங்கள் ஆய்வு செய்வோம்” என்று தேசிய அவசர ஊர்தி சேவைப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர் ஸ்டீபன்சன் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியிலிருந்து 11 மணி வரையில், மருத்துவ உதவி கேட்டு கிட்டத்தட்ட 1,900 அவசர அழைப்புகள் வந்ததாகவும், 7 மணியிலிருந்து 7.15 மணி வரையில் 4.5 நொடிகளுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதனால் மெல்பெர்ன் நகரம் முழுவதும் நேற்று இரவு மிகுந்த பரபரப்போடு காணப்பட்டுள்ளது.