Home நாடு வறுமையின் விகிதம்1.7 : பிரதமரின் புள்ளிவிவரம் தவறு – என்.சுரேந்திரன்

வறுமையின் விகிதம்1.7 : பிரதமரின் புள்ளிவிவரம் தவறு – என்.சுரேந்திரன்

652
0
SHARE
Ad

N-Surendranகோலாலம்பூர்,மார்ச் 20 – மலேசியாவில் வறுமையின் விகிதம் 2012 ஆம் ஆண்டில் 1.7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக ‘தேசிய உருமாற்றுத் திட்டத்தின்’ஆண்டறிக்கையில் பிரதமர் நஜிப் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் தவறு, நாட்டில் வறுமையின் விகிதம் 19 சதவிகிதம் என்பதே உண்மை என்று பி.கே.ஆர் உதவித் தலைவர் வழக்கறிஞர் என். சுரேந்திரன்  கூறியுள்ளார்.

மேலும் இது பற்றி அவர் கூறுகையில்,“கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் எத்தனையோ குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.ஆனால் நஜிப் வெளியிட்டுள்ள 1.7  சதவிகிதம் என்ற புள்ளிவிவரம் நம்பமுடியாதவகையிலும், அடிப்படை ஆதாரங்களின்றியும் உள்ளது.

“மேலும் பி.கே.ஆர் வெளியிடும் வறுமை விகிதம் நம்பகத்தன்மை வாய்ந்தது. காரணம் சர்வேதச அளவில், அங்கீகரிப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களின் சராசரி மாத வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு அவை அளவிடப்படுகிறது”என்றார்.

#TamilSchoolmychoice

மேலும்,  நாட்டில் ஏராளாமான மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கையில்,தேசிய முன்னணி அரசு இது போன்ற பொய்யான புள்ளிவிவரங்களை வெளியிடுவது,அவர்களின் பொருளாதார உருமாற்றுத் திட்டத்தின் தோல்வியையே பிரதிபலிக்கிறது என்றும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.