சிங்கப்பூர் – காணொளி ஒன்றை பார்த்த பின்னர், ஆப்பிள் ஐபோன்கள் பயன்படுத்த இயலாத படி முடங்கிவிடும் வகையில் புதிய ‘பக்’ எனப்படும் வழு (Crash bug) ஒன்று தாக்குவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்தக் குறிப்பிட்ட காணொளியை இயக்குவதன் மூலம் உடனடியாக திறன்பேசியின் செயல் வேகம் குறைந்து, இறுதியில் செயல்பாடு நிறுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், எந்த வகை ஐபோன்கள் இதனால் பாதிப்படைகின்றன என்பது குறித்து தெரியவில்லை.
சினா வெய்போ (Sina Weibo-backed video-sharing app Miaopai) என்ற செயலியில் இருந்து அக்காணொளி பகிரப்படுவதாகவும், அக்காணொளியைப் பார்த்த பின்னர், சுமார் 1 நிமிடத்திற்குப் பிறகு ஐபோன்கள் முடங்கி விடுகின்றன என்றும் ‘தி கார்டியன்’ கூறுகின்றது.
கீழேயுள்ள யூடியூப் காணொளி ஐபோன்கள் எப்படி பாதிப்படைகின்றன என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதனைக் காணலாம்:-