Home Featured நாடு ‘சொஸ்மா தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல’ – நூர் ஜஸ்லான்

‘சொஸ்மா தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல’ – நூர் ஜஸ்லான்

702
0
SHARE
Ad

Nur-Jazlan-Mohamadகோலாலம்பூர் – 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் (சொஸ்மா) சட்டம் என்பது தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல என்று துணை உள்துறை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் நூர் மொகமட் தெரிவித்துள்ளார்.

மாறாக தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமையை சீர்குலைக்கும் செயல்களுக்கும் அச்சட்டம் பயன்படும் என்றும் நூர் ஜஸ்லான் குறிப்பிட்டுள்ளார்.

“தீவிரவாதிகளை மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீதும் சொஸ்மாவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்”

#TamilSchoolmychoice

“எந்த ஒரு வன்முறை சம்பவோ அல்லது தீவிரவாத நடவடிக்கையோ, குற்றச்செயல்களோ நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிப்பவை, அதற்கு ஒரு உதாரணமாகும்” என்று நூர் ஜஸ்லான் நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டு, 28 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.