கோலாலம்பூர் – ஜப்பானில் நேற்று அதிகாலை 5.59 மணியளவில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், டோக்கியோவிலுள்ள மலேசியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்பேரிடரில் மலேசியர்கள் யாரும் பாதிப்படையவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், மலேசியத் தூதரகம் தொடர்ந்து கண்காணிப்பினை மேற்கொண்டு வருவதாகவும், ஜப்பான் மக்களுக்கு மலேசிய அரசாங்கம் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.