Home 13வது பொதுத் தேர்தல் சங்காட் ஜெரிங் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் மந்திரி பெசார் நிஸார் போட்டி

சங்காட் ஜெரிங் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் மந்திரி பெசார் நிஸார் போட்டி

562
0
SHARE
Ad

Nizar-Jamaludin-1---Sliderதைப்பிங், மார்ச் 20 –   எதிர்வரும் 13 வது பொதுத்தேர்தலில் பேராக் மாநிலத்தில், மக்கள் கூட்டணி ஆட்சி செய்தபோது, அதில் பத்து மாதங்கள் மந்திரி பெசாராக பொறுப்பேற்றிருந்த டத்தோஸ்ரீ நிஸார் ஜமாலுடின்,  சங்காட் ஜெரிங் சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2009ல் புக்கிட் கந்தாங் நாடாளுமன்றத்திற்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நிஸார், இப்போது அதே நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கிய சங்காட் ஜெரிங் சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிடுகிறார்.

கடந்த திங்களன்று ஆயர் கூனிங்கில் நடந்த பாஸ் கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் அக்கட்சியின் பேராக் மாநிலத் தலைவர் உஸ்டாஸ் அபு பக்கர் ஊசேன் அதிகாரப்பூர்வமாக நிஸார் போட்டியிடுவதை அறிவித்தார். இந்நிகழ்வில் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நிஸாரால் கலந்துகொள்ளமுடியவில்லை.

#TamilSchoolmychoice

மீண்டும் மக்கள் கூட்டணி ஆட்சி

கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தலைவர் உஸ்டாஸ் வேட்பாளர் குறித்து தலைமையகத்திற்கு அறிவித்திருப்பதாகச் சொன்னார். சங்காட் ஜெரிங் தொகுதியைச் சேர்த்து இம்முறை பாஸ் கட்சி 22 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், கூட்டணிக்கட்சிகளுடன் மீண்டும் பேராக் மாநிலத்தில் ஆட்சியமைப்போம் என்று தெரிவித்தார்.