Home தேர்தல்-14 பேராக்: அதிரடி மாற்றம் – அகமட் பைசால் அசுமு புதிய மந்திரி பெசார்

பேராக்: அதிரடி மாற்றம் – அகமட் பைசால் அசுமு புதிய மந்திரி பெசார்

1114
0
SHARE
Ad
பேராக் மந்திரி பெசாராகப் பதவியேற்கும் அகமட் பைசால்

கோலகங்சார் – பேராக் மாநிலத்திற்கான புதிய மந்திரி பெசார் நியமனத்தில் அதிரடியாக அதிர்ச்சி தரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

பேராக் மாநில மந்திரி பெசாராக அகமட் பைசால் அசுமு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

இதற்கு முன் வந்த தகவல்களின்படி 9 ஆண்டுகளுக்கு முன்னர் பேராக் மந்திரி பெசார் பதவியிலிருந்து ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலால் வீழ்த்தப்பட்ட முகமட் நிசார் ஜமாலுடின் மீண்டும் பேராக் மாநில மந்திரி பெசாராக பதவி ஏற்கிறார் என அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

பதவி வீழ்த்தப்பட்டபோது, நிசார் பாஸ் கட்சியின் சார்பிலான சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது அமானா கட்சியில் இணைந்திருக்கிறார்.

இரண்டு தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் அணிக்குத் தாவியதன் காரணமாக, பக்காத்தான் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர் பலம் 31 ஆக அதிகரித்துள்ளது.