Home தேர்தல்-14 முகமட் நிசார் ஜமாலுடின் மீண்டும் பேராக் மந்திரி பெசார்

முகமட் நிசார் ஜமாலுடின் மீண்டும் பேராக் மந்திரி பெசார்

1130
0
SHARE
Ad

9 ஆண்டுகளுக்கு முன்னர் பேராக் மந்திரி பெசார் பதவியிலிருந்து ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலால் வீழ்த்தப்பட்ட முகமட் நிசார் ஜமாலுடின் மீண்டும் பேராக் மாநில மந்திரி பெசாராக இன்று பிற்பகலில் பதவி ஏற்றார்.

பதவி வீழ்த்தப்பட்டபோது, நிசார் பாஸ் கட்சியின் சார்பிலான சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது அமானா கட்சியில் இணைந்திருக்கிறார்.

அன்று சில உறுப்பினர்களின் கட்சித் தாவலால் பதவியில் இருந்து வீழ்த்தப்பட்ட நிசாருக்கு தற்போது மீண்டும் இரண்டு தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் அணிக்குத் தாவியதன் காரணமாக, மந்திரி பெசார் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

#TamilSchoolmychoice