Home தேர்தல்-14 5 மூத்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு – மகாதீர் நியமித்தார்

5 மூத்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு – மகாதீர் நியமித்தார்

1447
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – இன்று பிற்பகலில் மூன்று முக்கிய அமைச்சர்களை நியமித்த பிரதமர் துன் மகாதீர் 5 பேர் கொண்ட மூத்த நிபுணர்களின் ஆலோசனைக் குழு ஒன்றையும் நியமித்தார்.

இந்த ஆலோசனைக் குழு பல்வேறு விவகாரங்களிலும், பொருளாதார அம்சங்களிலும், புதிதாக அமைக்கப்படவிருக்கும் அமைச்சுப் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கும்.

5 மூத்த நிபுணர்கள் பின்வருமாறு:-

  1. துன் டாயிம் சைனுடின் (முன்னாள் நிதியமைச்சர்)
  2. டான்ஸ்ரீ செத்தி அக்தார் (முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநர்)
  3. டான்ஸ்ரீ ரோபர்ட் குவோக் (ஹாங்காங்கில் வசிக்கும் மலேசியக் கோடீஸ்வரர்)
  4. டான்ஸ்ரீ ஹாசான் மரிக்கான் (முன்னாள் பெட்ரோனாஸ் தலைவர்)
  5. ஜோமோ கே.எஸ்.சுந்தரம் (முன்னாள் மலாயாப் பல்கலைக் கழக விரிவுரையாளர்; பொருளாதார நிபுணர்; முன்னாள் ஐ.நா.மன்றத்தின் உதவிச் செயலாளர்களில் ஒருவர்)