Home தேர்தல்-14 பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஆட்சி அமைக்கிறது- 2 தே.முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவினர்

பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஆட்சி அமைக்கிறது- 2 தே.முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவினர்

1249
0
SHARE
Ad

ஈப்போ – பேராக் மாநிலத்தில் அடுத்த மாநில அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி சிக்கல் நேரலாம் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தேசிய முன்னணியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் கூட்டணியில் இணைந்தனர்.

இதைத் தொடர்ந்து பேராக் மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணியின் பலம் 31 ஆக அதிகரித்தது.

இன்று பிற்பகலில் பேராக் மாநிலத்தின் மந்திரி பெசார் பதவி ஏற்கவும், மாநில அரசாங்கத்தை அமைக்கவும், பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அனுமதி வழங்கியுள்ளார்.