மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 59 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பேராக் மாநிலத்தில் 29 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று பிகேஆர் தனிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
பேராக் மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைமை பின்வருமாறு:
பிகேஆர் – 29
தேசிய முன்னணி – 27
பாஸ் – 3
எனவே, இந்த வெற்றியைத் தொடர்ந்து பேராக் மாநிலத்தில் பிகேஆர் தனிப் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், தேசிய முன்னணியும், பாஸ் கட்சியும் இணைந்தால் 30 சட்டமன்றத் தொகுதிகளை அந்தக் கட்சிகள் பேராக் மாநில சட்டமன்றத்தில் கொண்டிருக்கும்.
எனவே, பேராக் மாநிலத்தில் பிகேஆர் ஆட்சி அமைக்க பாஸ் கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், அதனால் இழுபறி நிலைமை ஏற்படலாம் எனக் கணிக்கப்படுகிறது.