கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பெரும்பான்மையான நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை அமைக்கிறது.
22 ஆண்டுகள் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்து ஓய்வு பெற்ற துன் டாக்டர் மகாதீர் முகமது, பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவராகத் தனது 93-வது வயதில் மீண்டும் மலேசியப் பிரதமராகப் பதவியேற்கிறார்.
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் துணைப் பிரதமராகப் பதவியேற்கிறார்.
இதனையடுத்து அடுத்த 5 ஆண்டுகள் இரு மருத்துவர்கள் சேர்ந்து மலேசியாவை ஆட்சி செய்யவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.