Home தேர்தல்-14 “ஆட்சி அமைக்கிறோம், 2 நாள் பொதுவிடுமுறை” – மகாதீர் அறிவிப்பு!

“ஆட்சி அமைக்கிறோம், 2 நாள் பொதுவிடுமுறை” – மகாதீர் அறிவிப்பு!

2111
0
SHARE
Ad

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியமைப்பதை அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும், தான் பிரதமராகப் பதவியேற்பேன் என்றும், டாக்டர் வான் அசிசா துணைப் பிரதமராகப் பதவியேற்பார் என்றும் மகாதீர் அறிவித்தார்.

ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி, வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் பொதுவிடுமுறை என்றும், அடுத்து வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையைச் சேர்த்து மலேசியர்களுக்கு மொத்தம் 4 நாட்கள் விடுமுறை என்றும் மகாதீர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்குப் பிறகு வெற்றியடைந்தவர்களுக்கு ஓய்வு இருக்காது என்றும், விறுவிறுப்பாக பணிகள் நடைபெறும் என்றும் மகாதீர் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.