Home தேர்தல்-14 சபா: தே.முன்னணியில் இருந்து பிபிஎஸ் விலகுகிறது – மூசா அமான் பிபிஎஸ் கட்சியில் இணைகிறார்

சபா: தே.முன்னணியில் இருந்து பிபிஎஸ் விலகுகிறது – மூசா அமான் பிபிஎஸ் கட்சியில் இணைகிறார்

1066
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் தொடர்ந்து அதிர்ச்சி தரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆகக் கடைசியாக வெளிவந்திருக்கும் தகவல்களின்படி ஜோசப் பைரின் கித்திங்கான் தலைமையிலான பார்ட்டி பெர்சாத்து சபா கட்சி தேசிய முன்னணியிலிருந்து விலகுவதாக ஜோசப் பைரின் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் நேற்று இரவு தேசிய முன்னணி சார்பில் சபா முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட – கடந்த தவணையில் சபா மாநில முதல்வராகப் பதவி வகித்த – மூசா அமான் – அம்னோவிலிருந்து விலகி ஜோசப் பைரினின் பிபிஎஸ் கட்சியில் இணைவார் என்றும் ஜோசப் பைரின் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பிபிஎஸ் தேசிய முன்னணியில் இருந்து விலகும் நான்காவது சபா கட்சியாகும். ஏற்கனவே, உப்கோ, லிபரல் டெமோக்ரெடிக் பார்ட்டி (எல்டிபி), பார்ட்டி பெர்சாத்து ராயாட் சபா ஆகிய கட்சிகள் தேசிய முன்னணியில் இருந்து விலகியுள்ளன.

மத்தியிலும் மாநிலத்திலும் தேசிய முன்னணி இனியும் வலுவுடன் செயலாற்ற வாய்ப்பில்லை எனவும் ஜோசப் பைரின் தெரிவித்துள்ளார்.