Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா உடல்நலக் குறைவு! அறுவை சிகிச்சை நடத்தப்படலாம்!

ஜெயலலிதா உடல்நலக் குறைவு! அறுவை சிகிச்சை நடத்தப்படலாம்!

489
0
SHARE
Ad

jayalalitha

சென்னை – அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா முழு உடல் நலம் அடைந்து விட்டார் என்றும் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம் என்றும் அப்போலோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி அறிவித்திருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு இதன் தொடர்பிலான இறுதி நேரத் தகவல்கள் வருமாறு:

  • முதல்வரின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை நடத்த மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
#TamilSchoolmychoice

apollo-hospital-4-dec-statement-on-jayalalitha

அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை…

  • ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரவு முழுவதும் அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.
  • தமிழக அமைச்சர்களும் அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
  • தமிழகக் காவல் துறை தலைமை இயக்குநர் ராஜேந்திரன் உயர் மட்ட காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
  • முதல்வர் உடல் நலம் குன்றியுள்ளது  குறித்து கவலையடைவதாகவும், அவர் நலமடைய பிரார்த்திப்பதாகவும் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

prnab-mukerjee-twitter-jayalalitha

  • தமிழகத்திற்கு துணை இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காவல் துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
  • மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பிரதமர் மோடியும் இன்று திங்கட்கிழமை சென்னை வருவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
  • தமிழகத்தில் நிகழ்ச்சிகளை இரத்து செய்யுமாறு தமிழகத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.