Home Featured உலகம் இத்தாலி, நியூசிலாந்து பிரதமர்கள் திடீர் பதவி விலகல்!

இத்தாலி, நியூசிலாந்து பிரதமர்கள் திடீர் பதவி விலகல்!

803
0
SHARE
Ad

italyரோம் – இன்று திங்கட்கிழமை ஒரே நாளில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இத்தாலியின் தற்போதைய அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் அந்நாட்டு மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தோல்வியடைந்ததால், இத்தாலி பிரதமர் மேட்டியோ ரென்சி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதேபோல், நியூசிலாந்து பிரதமர் ஜான் கீயும் இன்று திடீரென வெலிங்டனில் செய்தியாளர்களை அழைத்து தான் பதவி விலகும் அறிவிப்பை செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

வரும் டிசம்பர் 12-ம் தேதியோடு, தனது பதவிக் காலம் நிறைவடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்கி தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஜான் கீ தெரிவித்துள்ளார்.