சென்னை – தமிழகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில், ஜெயலலிதா மறைவு என வெளியிடப்பட்ட செய்தியில் உண்மையில்லை என்றும், இன்னும் உயிர்க்காப்பு கருவிகளுடன் துணையுடன் ஜெயலலிதா போராடி வருகின்றார் என்றும், அவருக்கு ஒரு பெரிய எண்ணிக்கையிலான மருத்துவர் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றது என்றும் அப்போலோ மருத்துவமனையின் அதிகாரபூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.