Home Featured தமிழ் நாடு “ஜெயலலிதா நிலைமை மோசமடைகிறது” – அப்போலோ மருத்துவமனை, டாக்டர் பீல் அறிக்கை!

“ஜெயலலிதா நிலைமை மோசமடைகிறது” – அப்போலோ மருத்துவமனை, டாக்டர் பீல் அறிக்கை!

720
0
SHARE
Ad

Jayalalitha

சென்னை – அப்போலோ மருத்துவமனையின் பொறுப்பாளரும், அம்மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் மகளுமான சங்கீதா ரெட்டி தனது டுவிட்டர் தளத்தில் செய்துள்ள பதிவில் “எங்களின் எல்லா முயற்சிகளையும் மீறி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மோசமடைந்து வருகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

jayalalithaa-twitter-sangita-reddy

#TamilSchoolmychoice

டாக்டர் ரிச்சர்ட் பீல் அறிக்கை

dr-richard-beale-jayalalitha-dr

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த இலண்டனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் டாக்டர் ரிச்சர்ட் பீல் (படம்) இலண்டனிலிருந்து வெளியிட்ட அறிக்கையொன்றில் ஜெயலலிதாவின் நிலைமை குறித்து வருந்துவதாகவும், அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது உலகத் தரத்திலான நிபுணத்துவத்தைக் கொண்ட மருத்துவ சிகிச்சை என்றும், உலகத் தரத்திற்கு இணையான தொழில்நுட்பத்தைக் கொண்ட சிகிச்சை அவருக்கு அப்போலோ மருத்துவர்கள் குழுவால் வழங்கப்பட்டது என்றும் ரிச்சர்ட் பீல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

dr-richard-beale-jayalalitha-treatment-statement

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவ நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ரிச்சர்ட் பீல் இலண்டனிலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கை