Home Featured நாடு 2017 ஆண்டிற்கான பிரிம் உதவித் தொகை விண்ணப்பங்கள் தொடக்கம்!

2017 ஆண்டிற்கான பிரிம் உதவித் தொகை விண்ணப்பங்கள் தொடக்கம்!

820
0
SHARE
Ad

br1m-2017கோலாலம்பூர் – 2017-ம் ஆண்டிற்கான ஒரே மலேசியா உதவித் தொகைக்கான (BR1M) விண்ணப்பங்கள் இன்று  திங்கட்கிழமை தொடங்கி டிசம்பர் 31-ம் தேதி  வரை வரவேற்கப்படுவதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரே மலேசியா உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களும், மறுபதிவு செய்பவர்களும் இணையம் மூலமாக செய்து கொள்ளலாம் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிபரங்களான முகவரி, வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே மலேசியா உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை, https://ebr1m.hasil.gov.my மற்றும் www.treasury.gov.my ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.