Home Featured தமிழ் நாடு ஓ.பன்னீர் செல்வம் புதிய தமிழக முதல்வர்!

ஓ.பன்னீர் செல்வம் புதிய தமிழக முதல்வர்!

649
0
SHARE
Ad

jayalalitha2

சென்னை – (மலேசிய நேரம் 8.00 மணி நிலவரம்) நேற்றிரவு தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து, தற்போதைய தமிழக நிலவரங்கள் வருமாறு:

  • ஜெயலலிதாவின் நல்லுடல் தற்போது அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்குக்  கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு இலட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
  • ஜெயலலிதாவுக்கான இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் நடைபெறுகின்றன.
  • இன்னும் சில மணிநேரங்களில் அவரது நல்லுடல் அவரது இல்லத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள், பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது.
  • இன்று செவ்வாய்க்கிழமை மாலையே ஜெயலலிதா நல்லடக்கம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அவரது நல்லுடல் எம்ஜிஆரின் நினைவிடத்திற்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
  • தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.
  • தமிழகத்தில் அரசு சார்பாக  7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.
  • இன்று பிற்பகல் 1.30 மணியளவில் (இந்திய நேரம்) தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்கிறார்.