Home Featured தமிழ் நாடு ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா நல்லுடல்: பொதுமக்கள் அஞ்சலி!

ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா நல்லுடல்: பொதுமக்கள் அஞ்சலி!

575
0
SHARE
Ad

jayalalithaசென்னை – நேற்று திங்கட்கிழமை இரவு இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில் இயற்கை எய்திய தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் நல்லுடல், போயஸ் கார்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

இதனையடுத்து, போயஸ் கார்டனில் இருந்து ராஜாஜி ஹாலுக்கு அவரது நல்லுடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அவரது நல்லுடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice