Home Featured நாடு ஜெயலலிதா இறுதி அஞ்சலி: அஸ்ட்ரோ 211, 221 அலைவரிசைகளில் நேரலை!

ஜெயலலிதா இறுதி அஞ்சலி: அஸ்ட்ரோ 211, 221 அலைவரிசைகளில் நேரலை!

749
0
SHARE
Ad

jayaகோலாலம்பூர் – தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

அவரது நல்லுடல் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி உட்பட தமிழகத்தின் முன்னணித் தொலைக்காட்சிகள் அதனை நேரலையாக ஒளிபரப்புகின்றன.

#TamilSchoolmychoice

அதேவேளையில், ஜெயலலிதா மீது பற்றும், மரியாதையும் கொண்ட எத்தனையோ தமிழர்கள் மலேசியாவில் வாழ்கிறார்கள். அவர்கள் அந்நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் அஸ்ட்ரோ அதனை நேரலையாக தற்போது ஒளிபரப்பி  வருகின்றது.

அஸ்ட்ரோ அலைவரிசை 211, 221 -ல் தற்போது ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை நேரலையாகக் காணலாம்.