கோலாலம்பூர் – ஒரே மலேசியா உதவித் தொகை (BR1M) விண்ணப்பங்களைப் பெற போலி இணையதளங்களை அணுகி விட வேண்டாம் என நிதியமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக http://brim-hasil.net/ மற்றும் https://www.facebook.com/BR1M3/ போன்ற பிரிம் பெயரில் இயங்கி வரும் இணைதளங்களில் பொதுமக்கள் தங்களின் சுய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டாம் என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.
https://ebr1m.hasil.gov.my என்ற இணையதளம் மட்டுமே பிரிம் விண்ணப்பங்களைப் பெற அதிகாரப்பூர்வ இணையதளம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017 -ம் ஆண்டிற்கான ஒரே மலேசியா உதவித் தொகை விண்ணப்பங்கள் நேற்று டிசம்பர் 5-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் 31-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 2017 பிப்ரவரி மாதம் முதல் உதவித் தொகைகள் விநியோகம் செய்யப்படும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.