Home Featured நாடு ஜெயலலிதா மறைவு: மலேசியாவிலும் அதிர்ச்சி அலைகள்! அனுதாபங்கள்!

ஜெயலலிதா மறைவு: மலேசியாவிலும் அதிர்ச்சி அலைகள்! அனுதாபங்கள்!

536
0
SHARE
Ad

jaya

கோலாலம்பூர் – ஞாயிற்றுக்கிழமை மாலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குன்றி, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்ற செய்திகள் வெளியானது முதல் தமிழ் நாட்டில் மட்டுமின்றி, மலேசியாவிலும் மக்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

மலேசியர்கள் பலர் முகநூல்,  டுவிட்டர்,  வாட்ஸ்எப் போன்ற நட்பு ஊடகங்களின் மூலமாக தங்களின் உணர்வுகளையும், கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.

#TamilSchoolmychoice

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என்ற செய்தி வெளிவந்தவுடன், செல்லியலிலும் உடனுக்குடன் செய்திகள் வெளியிடப்பட்டதால், மலேசிய வாசகர்களும் மற்ற நாடுகளில் இருக்கும் நமது வாசகர்களும் உடனுக்குடன் தகவல்களைத் தங்களின் செல்பேசிகளின் மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.  அந்த செய்திகளை மற்றவர்ககளுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது.

பல செல்லியல் வாசகர்கள் எங்களை அழைத்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்ததோடு, நட்பு ஊடகங்களிலும் தங்களின் அனுதாபங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இதன் மூலம் ஜெயலலிதாவின் மறைவு மலேசிய இந்தியர்களிடத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

மலேசியாவின் பல  அரசியல், சமூகத் தலைவர்கள் தங்களின் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.