Home Featured நாடு ஜெயலலிதா: மலேசிய அன்பர்களின் இரங்கல் செய்திகள் – அனுதாபங்கள்!

ஜெயலலிதா: மலேசிய அன்பர்களின் இரங்கல் செய்திகள் – அனுதாபங்கள்!

678
0
SHARE
Ad

jayalalithaa-demise-banner

கோலாலம்பூர் – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து மலேசியாவிலிருந்தும் அவரது அபிமானிகளும், ஆதரவாளர்களும் தொடர்ந்து தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து வருகின்றார்கள்.

அவற்றில் சில பகிர்வுகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

#TamilSchoolmychoice

மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா – துணையமைச்சர் டத்தோ சரவணன் 

மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மற்றும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் ஆகியோர் தங்களின்  இரங்கல் செய்திகளை வெளியிட்டிருந்தனர்.

அந்த இரங்கல் செய்திகளைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் :

‘நல்லுள்ளம் கொண்ட வீரப் பெண்மணி’ – டாக்டர் சுப்ரா இரங்கல்!

டத்தோ எம்.சரவணன்:

ஜெயலலிதா: “ஆண் சிங்கங்கள் நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றைப் பெண் சிங்கம்” டத்தோ சரவணன் இரங்கல்!

பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி, பினாங்கு துணை முதல்வர்

ramasamy-dap-deputy-chief-ministerபினாங்கு துணை முதல்வரும், ஜசெக தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி தனது முகநூல் பதிவில் ஜெயலலிதா மறைவு குறித்து சில கருத்துகளை வெளியிட்டிருக்கின்றார்.

ஜெயலலிதாவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள அதே வேளையில், ஜெயலலிதாவுக்கு இருந்த பெரும் ஆதரவுக்கு அவர் இன்னும் கூடுதலாக தமிழக மக்களுக்கு பயன் விளைவிக்கும் செயல்களைச் செய்திருக்கலாம் என்றும் இராமசாமி தெரிவித்துள்ளார்.

இராமசாமியின் ஆங்கிலப் பதிவை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-

Prof Ramasamy comments on the demise of Jayalalitha

அஸ்ட்ரோ இந்தியப் பகுதி தலைவர் டாக்டர் இராஜாமணி

Dr.Rajamaniஅஸ்ட்ரோ இந்தியப் பகுதித் தலைவர் டாக்டர் இராஜாமணி ஜெயலலிதா குறித்த சில சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார். அரசியலில் ஜெயலலிதா புகழ் பெறாத கால கட்டத்தில் தனது நாடகப் படைப்பு ஒன்றுக்கு விருந்தினராக வருகை தந்து சிறப்பித்திருக்கின்றார் என்று இராஜாமணி நினைவு கூர்ந்துள்ளார்.

மிகவும் அரிதாகக் காணக் கிடைக்கும் கலைக் கண்ணோட்டத்தோடு எடுக்கப்படும் ஆங்கிலப் படங்கள் சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் திரையிடப்படும்போது நான் காண்பதற்கு செல்வேன். அந்தப் படங்களைக் காண ஜெயலலிதாவும் வருவார். அப்போது அவரை சந்தித்திருக்கின்றேன்.

அவர் வணிக ரீதியான படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், “ஆர்ட் பிலிம்” என அழைக்கப்படும் கலை ரீதியான, வழக்கமான முறையில் எடுக்கப்படாத ஆங்கிலப் படங்களை அவர் விரும்பிப் பார்த்தார்.

அரசியலில் நுழைந்து அவர் தமிழக முதல்வராக ஆனபோது அவரை நான் பேட்டி கண்டிருக்கின்றேன் என்றும் இராஜாமணி நினைவு கூர்ந்துள்ளார்.

தனேசு பாலகிருட்டிணன்

thanes-balakrishnanஉலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் தனேசு பாலகிருட்டிணன், “ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் அவா்களுக்குப் பிறகு தொடா்ந்து இரண்டு முறை தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றியவா் என்ற பெருமைக்குரியவா் அவா். அவரைப் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவும், புரட்சிப் பெண்ணாகவுமே நான் கருதுகிறேன். திரைப்பட நட்சத்திரமாகத் திரையுலகில் ஒளிர்ந்த அவா், நிஜ உலகில் மக்களின் நட்சத்திரமாக ஒளிர்ந்தார் என்றால் அது மிகையில்லை. ஏழைகள் வயிராற உணவுண்ண அம்மா உணவகம், மாணவா்களின் உயா்கல்வி வளர இலவச மடிக்கணினி என பல முன்னோடித் திட்டங்களை இந்தியாவிற்கு வழங்கிய ஆற்றல்சால் அரசியலாளா். மகளிர் தம் குழந்தைகளுக்குப் பாலுட்ட, பொது இடங்களில் தனி அறை உருவாக்கிய தாயுள்ளம் படைத்தவா். ஈடு இணையற்ற அவரது இழப்பிற்கு உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சா.விக்னேஸ்வரி

vignes-photoஉலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா என மகளிர் சமூக இயக்கங்களில் ஈடுபாடு கொண்ட கோலாலம்பூரைச் சேர்ந்த  சா.விக்னேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:-

“இந்தியாவைத் தவிர உலகத் தமிழர்களின் இதயத்திலும் ஜெயலலிதா  நீங்கா இடம் பெற்றவர். அது மட்டுமல்ல, உலகத் தலைவர்களின் இதயத்திலும் அம்மா இடம் பிடித்துள்ளார்கள் என்பது, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் முதல் அவரை சந்தித்துச் சென்றுள்ள அமெரிக்க மாநில ஆளுநர் ஆர்னால்டு வரை நமக்குச் சான்றாகும். நமது நாட்டிலிருந்தும் டத்தோஸ்ரீ சாமிவேலு, டான்ஸ்ரீ சுப்ரமணியம் என பல தலைவர்கள் அம்மாவைச் சந்தித்து வந்திருக்கின்றார்கள்”

‘ஒரு நிகழ்ச்சியில் பேசிய நமது பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாம்ரி, தேசிய முன்னணி சில தொகுதிகளில் அடைந்த தோல்வி பற்றி குறிப்பிடும்போது ஜெயலலிதாவை மேற்கோள் காட்டி”அவர்களைப் பாருங்கள். ஒரு தேர்தலில் தோல்வியடைந்தாலும், மறு தேர்தலில் எவ்வாறு மக்களின் ஆதரவை மீண்டும் பெற்று, வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.”

“எனவே, அம்மாவின் இன்றைய உச்ச அரசியல் நிலைமைக்கு இரண்டு முக்கியமான, வித்தியாசமான விஷயங்களை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒன்று, எந்தவித அரசியல் பாரம்பரியமும், அரசியல் குடும்பப் பின்னணியும் இல்லாமல் அரசியலுக்கு வந்து உச்சத்தைத்தொட்டது.

அவரது  அரசியல் பிரவேசம் புரட்சித் தலைவரால் நிகழ்ந்தது என்றாலும், புரட்சித்தலைவரின் அகால மறைவுக்குப் பின்னர்தான் அவர், தனது சொந்த உழைப்பு, திறமை, அசாத்திய துணிச்சல், தன்னம்பிக்கை  அறிவாற்றல், தலைமைத்துவம் ஆகிய அம்சங்களின் துணையோடு அரசியலில் உச்சத்தைத் தொட்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் மேலோங்கி இருக்கும் ஆணாதிக்க அரசியலில் அவர் ஒரு பெண்மணியாகத் தனித்து நின்று அரசியல் அரங்கில் காய்களை நகர்த்தி வெற்றி கண்டதே அவரது சாணக்கியத்தனத்திற்கு சான்றாகும்.

அவரது துணிவு, தெளிவாக முடிவெடுக்கும் புத்திசாலித்தனம், எப்போதும் சாந்தம் தவழும் முகத்தில் கோபப்படும்படி ஏதும் நிகழ்ந்தால் அதை வெளிக்காட்டும் விதம், தாய்மையுணர்வு இப்படி அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல் அரசியலுக்கு வந்து ஜெயித்துக் காட்டிய பெண் உலகத்திலேயே அம்மாவாகத்தான் இருக்கும்.

சற்றுமுன் நான் குறிப்பிட்ட சாந்தமான முகத்திலும் கோபம் என்பதை 2004-இல்  பிபிசி ஹார்ட் டாக் (Hard Talk) எனப்படும்  ஆங்கில நேர்காணலில் காணலாம். கேள்வியைக் கேட்டவர் தேவையில்லாத பல கேள்விகளைக் கேட்டும், அம்மாவின்  பதிலை முழுமையாக கேட்காமல் இடைமறித்து பேசிக்கொண்டே இருந்ததாலும், ஆத்திரமடைந்த அம்மா, அத்துடன் அந்த நேர்காணலை முடித்துக்கொள்வதாகக் கூறி, மைக்கை அநாயசமாக மேசை மேல் தூக்கிப்போட்ட துணிச்சலும் ஆத்திரமும் எனக்குப் பிடித்திருந்தது.

அவருக்குச் சரியெனப்பட்ட நியாயங்களை செயல்படுத்த அவர் என்றுமே தவறியதில்லை. உலகிலேயே அத்துணை விமர்சனங்களையும் தூக்கியெறிந்துவிட்டு பொது வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒரே தலைவர் இவராகத்தான் இருக்கும்.

எல்லாவற்றிலும் பிடிவாதமாக சாதித்தவர், தன்னுடைய உயிர் விஷயத்தில் விட்டுக்கொடுத்துவிட்டதே ஈடுசெய்யமுடியாத வருத்தம். அந்த சாதனைத்தலைவி என்றுமே அனைவரின் மனதிலும் சரித்திரமாக நிலைத்திருப்பார்.