Home Featured உலகம் பண்டா ஆச்சே நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

பண்டா ஆச்சே நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

656
0
SHARE
Ad

banda-ache-1பண்டா ஆச்சே – இந்தோனிசியாவின் சுமத்ரா தீவைச் சேர்ந்த ஆச்சே பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் அப்பகுதியில் கட்டிடங்கள் பல சரிந்து, சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும் பலர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இஸ்லாமியர்கள் அதிகமுள்ள அப்பகுதியில், அதிகாலையில் பெரும்பாலானோர் மசூதிக்கு தொழுகைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் இப்பேரிடர் நிகழ்ந்துள்ளது.

#TamilSchoolmychoice