Home Featured வணிகம் அஸ்ட்ரோ நிதி அறிக்கை – குறிப்பிடத்தக்க அம்சங்கள்

அஸ்ட்ரோ நிதி அறிக்கை – குறிப்பிடத்தக்க அம்சங்கள்

841
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அஸ்ட்ரோ வெளியிட்டுள்ள ஜனவரி 2017 ஆண்டின் ஒன்பது மாதங்களுக்கான முடிவுற்ற நிதியாண்டின் சிறப்பு சில சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:

அறிக்கையின் படி, அதில் மின் வணிகம் (e-commerce)  மற்றும் விளம்பர (Adex) வருவாய் மற்றும் வரிக்கு பிந்திய இலாபம் PATAMI மிதமான வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளது. விளையாட்டு உள்ளடக்க செலவுகள் மற்றும் நாணய மதிப்பிறக்கம் விளைவால் வரிக்கு முந்தைய இலாபம் (EBITDA) குறைந்துள்ளது.

astro-results-announce-8-dec-2016அஸ்ட்ரோ நிதிநிலை அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியின்போது….

#TamilSchoolmychoice

அஸ்ட்ரோவின் தலைவர் துன் சாக்கி அஸ்மி கூறுகையில், “நிர்வாகக் குழுவினர் பங்குதாரர்களுக்குத் தொடர்ச்சியான இலாப ஈவை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் முறையான திட்டங்களைக் கையாண்டு வருகின்றோம். மூன்றாம் இடைக்கால இலாப ஈவு பங்குக்கு 3 சென் வீதம் என்பதை இயக்குனர் வாரியம் பெருமனதுடன் அறிவிக்கிறோம்” என்று கூறினார். இவை கடந்த ஆண்டு இலாப ஈவு பங்கை ஒப்பிடுகையில் 9% கூடுதல் உயர்வு கண்டுள்ளது”, என்றார்.

அஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ ரோஹானா ரோஷன் கூறுகையில், “அனைத்து தளங்களிலும் நாங்கள் ஊடுருவி இருக்கும் வளர்ச்சியைக் காண முடிகின்றது. தற்போது அஸ்ட்ரோவின் தொலைக்காட்சி சேவை 5 மில்லியன் அதாவது மலேசியாவிலுள்ள 70% குடும்பங்களில் ஊடுருவியுள்ளது (3.4 மில்லியன் கட்டண தொலைக்காட்சி மற்றும் 1.6 மில்லியன் என்ஜோய்). எங்களின் OTT மற்றும் On Demand (OD) தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் அதை  வேளையில் அஸ்ட்ரோ ஒன் தோ கோ செயலியின் பதிவிறக்கம் 31% உயர்ந்து அதாவது 1.1 மில்லியன் பேர் வாராந்திர நாட்களில் சராசரி 130 நிமிடத்திற்கு நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பது மட்டுமின்றி On Demand (OD) சேவையின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் 600 ஆயிரம் காணொளிகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றது. எங்களின் சமூக ஊடக தளங்களை தற்போது மாதத்திற்கு 5.1 மில்லியன் பேர் பார்வையிடுகின்றனர். Astro Gempak எனப்படும் எங்களின் மலாய் மொழி பொழுதுபோக்கு அகப்பக்கத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1 மில்லியனாக உயர்ந்து மொத்தம் 625.5 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டு மலேசியாவின் மிகப் பிரபலமான யூடிப்பு அலைவரிசையாகத் திகழ்கின்றது” என விவரித்துள்ளார்.

பிரீமியம் மற்றும் பல்வகை உள்ளடக்கம்

ASTRO eyes“அஸ்ட்ரோவின் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் பங்கு 1% உயர்ந்து 77% சதவிதத்தை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அஸ்ட்ரோவின் தயாரிப்பிலான நிகழ்ச்சிகள், உள்ளூர் மற்றும் ஆசியான் நாட்டின் திரைப்படங்கள், நேரலை இசைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகளான Premier League, La Liga and F1, eSports, அனைத்துலக வெற்றிகண்ட திரைப்படங்கள், கொரியன் பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் மற்றும்  அதிகமான டிஜிட்டல் உள்ளடங்கள் போன்றவை கவனத்தில் கொண்டு நாங்கள் தொடர்ந்து பிரீமியம் மற்றும் பல்வகை உள்ளடக்கங்களை வழங்கி வருகிறோம்” என்றும் ரோஹானா ரோஷன் மேலும் தெரிவித்துள்ளார்.

மலேசியர்களின் மத்தியில் அஸ்ட்ரோவின் பன்மொழி உள்ளடக்கங்கள் தொடர்ந்து பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது. அவ்வகையில் Suri Hati Mr. Pilot எனும் நாடகத்தை 5.1 மில்லியன் பேர் தொலைக்காட்சி வாயிலாகவும் 4.6 மில்லியன் பேர் யூடியூப் காணொளி தளத்திலும் Gegar Vaganza 3 நிகழ்ச்சியை 4.5 மில்லியன் பேர் கண்டு களித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அஸ்ட்ரோவின் அனிமேஷன் நிகழ்ச்சியான Didi & Friends இசை காணொளிகளை 265 மில்லியன் பேர் யூடியூப் வாயிலாகக் கண்டு களித்துள்ள அதை வேளையில் இந்நிகழ்ச்சியைச் சார்ந்த மிகப் பிரபலமான விற்பனைப் பொருட்கள் அதிகளவில் விற்கப்பட்டுள்ளது

21-வது ஆசியான் தொலைக்காட்சி விருது விழாவில் Tulus Ikhlas சிறந்த தொலைக்காட்சி நாடகம் எனும் விருதையும் அண்மையில் தைப்பே நகரில் நடைபெற்ற 53-வது  கோல்டன் ஹோர்ஸ் திரைப்பட விருது விழாவில் ஒலாபோலா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அரெனா சஹாயா’ பாடலுக்கு சிறந்த திரைப்படப் பாடல் எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றிகளால் விளம்பர வருமானம் ‘எடெக்ஸ்’ 13% உயர்ந்து 524 மில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டியுள்ளது. அதை வேளையில், அஸ்ட்ரோவின் ‘டிவி எடெக்ஸ்’ மற்றும் ‘ரெடெக்ஸ்’ பங்கு முறையே 34% மற்றும் 73% அதிகரித்துள்ளன. தரம் உயர்த்தப்பட்ட சேவைகளின் அடிப்படையில் பயனரிடமிருந்து கிடைக்கப்பெறும் வருவாய்  (ARPU) 0.6% உயர்ந்து ரிம 99.9-ஆக பதிவு செய்துள்ளது.

அஸ்ட்ரோ ‘கோ ஷோப்’

bz_astro3அஸ்ட்ரோவின் இணைய வியாபாரம் எனப்படும் ‘கோ ஷோப்’ (Go Shop) வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 61% உயர்ந்துள்ள வேளையில் 691 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்று அதாவது ரிம 201 மில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது. இந்த வருவாய் 59% அதிகரித்துள்ளது. ‘கோ ஷோப்’ சேவையை மேலும் விரிவுப்படுத்த StarHub Cable Vision Ltd உடன் இணைந்து சிங்கப்பூரில் 5.5 மில்லியன் வாடிக்கையாளர்கள்  இச்சேவையைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

இளம் தலைமுறையினரைக் கவர்வது

எதிர்கால இளம் தலைமுறையினர்களுக்காக டிஜிட்டல் உள்ளடகங்களை அஸ்ட்ரோ உருவாக்கி வருகின்றது. அவ்வகையில் PGL, eGG Network உடன் இணைந்து மலேசியாவின் முதல் முறையாக பன்மொழி eSports சாம்பியன்ஷிப், Counter Strike: Global Offensive (CS:GO) Minor Championship Asia போட்டியைக் கடந்த அக்டோபர் மாதம் ஏற்றி நடத்தியது. இப்போட்டி விளையாட்டு OTT சேவையின் வாயிலாக 6 வகையான மொழியில் ஒளிபரப்பப்பட்டு 1.5 மில்லியன் இரசிகர்களை ஈர்த்துள்ளது.

அஸ்ட்ரோவின் OTT  காணொளி சேவை, Tribe இளம் தலைமுறையினர்களுக்காக அண்மையில்  பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. Globe Telecoms Inc., Tribe இந்தக் கூட்டணி முயற்சி பலவகையான ஆழ்ந்த அனுபவத்தையும் வழங்குவதாகும்.

டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துதல்

astroஇன்றைய நவீன உலகில் அதிகமானவர்கள் மின்னியலை நோக்கிப் பயணிக்கின்றனர். இதனைக் கருதில் கொண்டு அஸ்ட்ரோ அனைத்து தளங்களிலும் அதன் சேவையை வழங்குவது மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் கையடக்க சாதனங்களின் வாயிலாகச் சிறந்த சேவையைப் பெறுவதை உறுதிப்படுத்துகின்றது.

டத்தோ ரோஹானா கூறுகையில், “உலகளவிலான தொழில்நுட்ப நிறுவனங்களான Amazon மற்றும் Microsoft Corporation உடன் இணைந்து எங்களின் சேவைகளின் திறன்களை மேன்மேலும் துரிதப்படுத்துகின்றோம். அதிகளவிலான முனைப்பும் அளவிடுதலும் புதிய வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய Amazon அகப்பக்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்”, என்றார்.

எங்களின் அனைத்து டிஜிட்டல் சேவைகளும் தற்போது கையடக்க சாதனங்களில் உள்ளடக்கியுள்ளது. இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட  அஸ்ட்ரோ ஒன் தெ கோ (AOTG) செயலியின் வாயிலாக வாடிக்கையாளர்கள்  புதிய உள்ளுணர்வு பயனர் இடைமுகம் மற்றும் தனிப்பட்ட புதிய அம்சங்களை இச்சேவையில் அணுக்கலாம்.

இறுதியாக, டத்தோ ரோஹானா கூறுகையில், “எங்களின்  திறமைசாலிகளை ஊக்கமூட்டி வளர்த்து விடுவதோடு, அவர்களை அனைத்துலக அரங்கிற்கு அவர்களைக் கொண்டுச் செல்வதிலும் நாங்கள் முனைப்புக் காட்டி துணை நிற்கிறோம். அண்மையில் CNBC ஏற்பாட்டில் நடைபெற்ற 15th Asia Business Leader Awards எனும் விருது விழாவில் ஆசியாவின் சிறந்த “talent management” என்று கெளரவிக்கப்பட்டோம்”, என்றார்.