Home Featured இந்தியா ‘முதல்வரின் மரணத்தில் மர்மம்’ – பிரதமருக்கு கௌதமி கடிதம்!

‘முதல்வரின் மரணத்தில் மர்மம்’ – பிரதமருக்கு கௌதமி கடிதம்!

825
0
SHARE
Ad

jeyalalitha-kamalhasanசென்னை – முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் திடீர் மறைவு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக நடிகை கௌதமி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஒரு சாதாரண இந்தியக் குடிமகள் என்ற முறையில் தான் இக்கடிதத்தை எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள கௌதமி, அரசியலிலும், பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், திடீரென மரணமடைந்திருப்பதும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் அன்பிற்குரிய முதல்வர் மருத்துவமனையில் இருந்த போது யாரையும் பார்க்க அனுமதிக்காமல் தடுத்தது ஏன்? யாரால் தடுக்கப்பட்டார்? எதனால் தடுக்கப்பட்டார்? அவர் சிகிச்சையில் இருந்த போது முடிவுகளை எடுத்தவர் யார்? இது போன்ற மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போவது யார்? இப்படி மக்கள் கேட்கும் பல கேள்விகளை அவர்களின் பிரதிநிதியாக உங்கள் காதுக்குக் கொண்டு வருகிறேன் என்று கௌதமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கௌதமி எழுதியுள்ள முழுக் கடிதத்தை கீழ்காணும் இணைப்பின் வழியாகப் படிக்கலாம்:-

https://gautamitadimalla.wordpress.com/2016/12/08/tragedy-and-unanswered-questions/