Home Featured நாடு சபா கடற்பகுதியில் 3 சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை!

சபா கடற்பகுதியில் 3 சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை!

1012
0
SHARE
Ad
Sabah_map

கோத்தா கினபாலு – லகாட் டத்துவிலுள்ள டார்வெவெல் பே என்ற இடத்தின் மெராபுங் பகுதியில், கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் கும்பல் ஒன்றிற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அக்கும்பலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.சபா காவல்துறை ஆணையர் டத்தோ அப்துல் ரஷித் ஹாருன் இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் பாதுகாப்புப் படையினருக்கும், அக்கும்பலுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்தது என்று தெரிவித்துள்ளார்.

“இது குறித்த முழு விபரங்களை பின்னர் அறிவிப்பேன். இப்போது தான் முழு விசாரணை நடத்தி வருகின்றோம்” என்றும் அப்துல் ரஷித் ஹாருன் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் ஒருவரை அவர்கள் கடத்த முயற்சி செய்த போது பாதுகாப்புப் படை அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அதோடு, அந்தக் கும்பலைச் சேர்ந்த 3 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த ஆண்டு சபாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நடந்த 9 கடத்தல் சம்பவங்களில் குறைந்தது 6 கடத்தல் சம்பவங்களில் இக்கும்பலுக்குத் தொடர்பிருக்கலாம் என காவல்துறை நம்புகின்றது.