கோலாலம்பூர் – உலகம் எங்கும் கையடக்கக் கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வரும் போக்குகளுக்கு ஏற்ப மலேசிய துணைக்கோள தொலைக்காட்சி ஒளிபரப்பான அஸ்ட்ரோ அலைவரிசைகளை ‘அஸ்ட்ரோ ஒன் தெ கோ (AOTG)’ செயலியின் வழியாக கண்டு களிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
‘அஸ்ட்ரோ ஒன் தெ கோ’ செயலியின் பதிவிறக்கம் 31% ஆக உயர்வு கண்டுள்ளது என்றும் அஸ்ட்ரோ தெரிவித்துள்ளது
அஸ்ட்ரோவின் நிதி அறிக்கை
இதற்கிடையில் அஸ்ட்ரோ வெளியிட்டுள்ள ஜனவரி 2017 ஆண்டின் ஒன்பது மாதங்களுக்கான முடிவுற்ற நிதியாண்டின் சிறப்பு சில சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:
- வருவாய் உயர்வு 3%, 4.2 பில்லியன் ரிங்கிட்
- வரிக்கு முந்தைய இலாபம் (EBITDA) உயர்வு 4%, 1.4 பில்லியன் ரிங்கிட்
- வரிக்கு பிந்திய இலாபம் (PATAMI) உயர்வு 16%, 479 மில்லியன் ரிங்கிட்
- பணப்புழக்கம் (FCF) 1.0 பில்லியன் ரிங்கிட்
- மூன்றாம் இடைக்கால இலாப ஈவு, பங்குக்கு மூன்று சென் வீதம்
அடுத்து: அஸ்ட்ரோ நிதி அறிக்கையின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்