Home Featured உலகம் கலிபோர்னியா கடற்கரையோரம் 6.8 புள்ளி நிலநடுக்கம் தாக்கியது!

கலிபோர்னியா கடற்கரையோரம் 6.8 புள்ளி நிலநடுக்கம் தாக்கியது!

695
0
SHARE
Ad

california-location-map

லாஸ் ஏஞ்சல்ஸ் –  கலிபோர்னியா மாநிலத்தின் வடக்குப் பகுதி கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் கடல் ஆழத்தில் 6.8 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று வியாழக்கிழமை காலை 6.50 மணியளவில் (அமெரிக்க நேரப்படி)  தாக்கியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

கலிபோர்னியாவின் வட பகுதிகளில் சில இடங்கள் ஆட்டம் கண்டன என்பதோடு, தென் பகுதியிலுள்ள சான் பிரான்சிஸ்கோ நகரின் சில பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.

#TamilSchoolmychoice

இருப்பினும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.