Home Featured நாடு டான்ஸ்ரீ பாலா, டத்தோ ஹென்ரி மீண்டும் மஇகாவில் இணைந்தனர்!

டான்ஸ்ரீ பாலா, டத்தோ ஹென்ரி மீண்டும் மஇகாவில் இணைந்தனர்!

721
0
SHARE
Ad

bala-henry-combo

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை மாலை 7.00 மணியளவில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், மற்றும் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் ஆகிய இருவரும் மீண்டும் மஇகாவில் இணைவதற்கு செய்து கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுவரை முன்னாள் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் அணியில் இயங்கி வந்த இவர்கள் இருவரும் மீண்டும் மஇகாவில் இணைந்ததன் வழி, பழனிவேல் அணி என்ற பெயரில் இயங்கி வந்த அனைத்து முக்கியத் தலைவர்களும் மஇகாவில் மீண்டும் இணைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கடந்த நவம்பர் 5-ஆம் தேதி டத்தோ எஸ்.சோதிநாதன் தலைமையில் சுமார் 627 கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் சோதிநாதன் அதிகாரபூர்வமாக மஇகாவில் உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டார்.

நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற மஇகா கிளைகளின் இணைப்பு விழாவில் உரையாற்றிய டத்தோ சோதிநாதன், விரைவில் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணனும், டத்தோ ஹென்ரியும் மீண்டும் மஇகாவில் இணைவார்கள் என அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தில் பாலாவும், ஹென்ரியும் கட்சியில் மீண்டும் இணைந்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து அவர்களைச் சார்ந்த கிளைகளும் ஆதரவாளர்களும் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என்பதால், இந்த மறு-இணைப்புகளின் மூலம் கட்சியில் பலம் மேலும் கூடியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.