Home நாடு முன்னாள் மஇகா உதவித் தலைவர் சாலை விபத்தில் மரணம்!

முன்னாள் மஇகா உதவித் தலைவர் சாலை விபத்தில் மரணம்!

1333
0
SHARE
Ad

ஜோகூர் பாரு:  மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், வணிகப் பிரமுகருமான டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், இன்று புதன்கிழமை அதிகாலை 12.10 மணியளவில், கூலாய் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காலமானார். இந்த சாலை விபத்தில் அவருடன் பயணம் செய்த மூவரும் மரணமடைந்தனர் என கூலாய் மாவட்ட காவல் துறைத் தலைவர் தொக் பெங் இயோ அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.

கொள்கலன் வாகனம் ஒன்று கட்டுப்பட்டை இழந்து, எதிரே போகும் பாதையில் நுழைந்ததில், இவர்களின் வாகனத்தை மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மேலும் ஒரு புரோட்டோன் வீரா ரக காரும் விபத்துக்குள்ளானது. ஜி. ரவி (55), ஏ.ரகு (47) மற்றும் கெ. இராமசந்திரன் (51) ஆகியோர் விபத்தில் உயிர் இழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அக்காரில் அவருடன் சேர்த்து மொத்தம் ஏழு பேர் பயணம் செய்துள்ளனர். மேலும், மூவர் காயங்களுக்கு ஆளானதாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொள்கலன் ஓட்டுனர் எந்த ஒரு காயமும் இன்றி உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.   

கடந்த 2013-ஆம் ஆண்டும் தொடங்கி 2015-ஆம் வரையிலும், டான்ஶ்ரீ எஸ். பாலகிருஷ்ணன், தேசிய மஇகாவின் உதவித் தலைவராக பதவியில் இருந்தார்.