Home உலகம் தாய்லாந்து: பொதுத் தேர்தலின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி உள்ளது!

தாய்லாந்து: பொதுத் தேர்தலின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி உள்ளது!

798
0
SHARE
Ad

பேங்காக்: 2014-ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக்கு உட்பட்டதிலிருந்தே, தாய்லாந்து தேர்தல்கள் கணிசமான பலவீனத்தை கொண்டிருந்ததாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

இன்னும் பல வாக்குச் சாவடிகளில் எண்ணும் செயல்முறைகள்,  வாக்குகளை கணக்கெடுப்பது போன்ற செயல்முறைகள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான இடங்களில், பார்வையாளர்களோ, கட்சி முகவர்களோ அல்லது ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என அது குறிப்பிட்டுள்ளது. இம்மாதிரியான சூழலில் தேர்தலின் நேர்மையை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டி உள்ளது என அது தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தேர்தல் முடிவுகள் ஒரு நம்பகமான செயல்முறைக்கு உட்பட்டு வெளியிடப்படுவதை தேர்தல் ஆணைய அமைப்பு உறுதி செய்ய வேண்டும்” என அது கூறியுள்ளது.

கடந்த ஞாயிறன்று, 93 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. சுமார் 350 இடங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகள் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன.

137 இடங்களில் பியூ தாய் கட்சி முன்னிலை இருப்பதாகவும், 97 இடங்களில் பாலாங் பிராசாராட் கட்சி வென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  எனினும், முழுமையான முடிவுகள் வருகிற மே 9-இல் மட்டுமே அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.