கோலாலம்பூர்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில், போட்டியிடும் கட்சிகள் அமைக்கும் கூடாரங்களில், எந்த ஓர் அனுமதிக்கப்படாத நடவடிக்கைகளும் நடைபெறாமலிருபதற்காக தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்ப உள்ளதாக மலேசியாகினி செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிகபடியான தேர்தல் குற்றங்கள் பதிவாகி இருந்ததை, அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இறுதி நேரத்தில், வாக்காளர்களைத் தொந்தரவு செய்வதுவும், முந்தைய இடைத்தேர்தல்களில் கடைசி நிமிட வாக்களிப்புக்காக சாவடிகளைத் தவறாகப் பயன்படுத்திய கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது புகார் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி, ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ள வேளையில், வேட்புமனுத் தாக்கல் வருகிற மார்ச் 30-ஆம் தேதி நடக்க இருக்கிறது.
தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசான் போட்டியிடும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து டாகடர் ஶ்ரீராம் களம் இறங்க உள்ளார்.