Home நாடு இசாவின் கருத்தில் தவறேதுமில்லை!- வான் அசிசா

இசாவின் கருத்தில் தவறேதுமில்லை!- வான் அசிசா

1449
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நூருல் இசாவின் கருத்திற்கு பிரதமர் மகாதீரும் செவி சாய்த்து, நம்பிக்கைக் கூட்டணியில் ஒரு சில பிரச்சனைகள் இருப்பதை ஒப்புக் கொண்டதை துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா நேற்று செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள், இசாவின் கருத்தினை ஏற்றுக் கொண்டு, அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அவர் கருத்து சொன்னது தவறா? அவர் எந்த ஒரு பண மோசடி விவகாரத்தையோ, வேறு இதர விசயங்களையோ பேசவில்லை. ஓர் ஆக்கபூர்வமான அரசாங்கமாக நாம் அவரின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பெர்சாத்து கட்சியில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் அங்கத்துவம் பெறுவதும், மகாதீரின் போக்கு இன்னும் சர்வதிகார தன்மையிலேயே இருப்பதையும், இசா சுட்டிக் காட்டிப் பேசியிருந்தார். மேலும், நம்பிக்கைக் கூட்டணி அரசின் உறுப்பினர் கியாண்டி, பிஏசியின் தலைவர் பதவியில், இன்னும் நிலைத்திருப்பதை எதிர்த்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு நம்பிக்கைக் கூட்டணி அரசுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், பிகேஆர் கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலி தமது டுவிட்டர் பக்கத்தில், நூருல் இசாவின் இந்த செயலை சுட்டிக் காட்டி நகைத்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.