கோலாலம்பூர் – சம்மன் பெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் அபராதத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்தினால் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்குவதாக புக்கிட் அம்மான் போக்குவரத்து விசாரணை மற்றும் செயலாக்க இயக்குநர் எஸ்ஏசி முகமட் அகிர் டாருஸ் தெரிவித்துள்ளார்.
“உதாரணமாக அதிவேக போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு 300 ரிங்கிட் விதிக்கப்படுகின்றது. ஆனால் 30 நாட்களுக்குள் அந்த அபராதத்தைச் செலுத்தினால் 150 ரிங்கிட் தான். அப்படியானால் நீங்கள் செலுத்தும் சம்மனுக்கு 50 விழுக்காடு கழிவு கிடைக்கிறது. ஆனால் எவ்வளவு காலத்திற்குள் செலுத்துகிறீர்கள் என்பது முக்கியம்” என்று முகமட் தெரிவித்துள்ளார்.
மோட்டார் ஓட்டிகள் தங்களின் சம்மன்களை அந்தந்த பகுதிகளில் அமைந்திருக்கும் போக்குவரத்துக் காவல்துறை மையங்கள், அஞ்சலகங்கள், மலாயா வங்கி ஏடிஎம்-கள் அல்லது www.myeg.com.my மற்றும் www.rilex.com.my என்ற இரண்டு இணையதளங்களின் மூலம் செலுத்தலாம் என்றும் முகமட் அசிர் தெரிவித்துள்ளார்.