Home Featured உலகம் சாலமன் தீவுகளில் 8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

சாலமன் தீவுகளில் 8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

974
0
SHARE
Ad

earthquakeசிட்னி – சாலமன் தீவுகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை, கிட்டத்தட்ட 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரகிராவின் தென்மேற்கு பகுதியில் இருந்து சுமார் 42 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஏபிசி இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அத்தீவில் 35-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சரிந்துள்ளன.

#TamilSchoolmychoice

எனினும், முழுமையான சேத நிலவரங்கள் இன்னும் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.