Home உலகம் தாலிபான்களால் சுடப்பட்ட மலாலா மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள்

தாலிபான்களால் சுடப்பட்ட மலாலா மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள்

527
0
SHARE
Ad

Tamil-Daily-News_65460932255இங்கிலாந்து, மார்ச்.20- தீவிரவாதிகளால் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த மலாலா இன்று மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள்.

பாகிஸ்தானில் உள்ள அனைத்துப் பெண்களும் கல்வி அறிவு பெற வேண்டும் என்று பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த , 15 வயதான மலாலா யூசபாய் என்ற பாகிஸ்தான் சிறுமி கடந்த அக்டோபர் மாதம் பேருந்து நிறுத்தத்தில் தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மலாலாவின் தலையில் மூளைப்பகுதியின் அருகில் குண்டடிபட்டது. உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா பின்னர் மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் மலாலாவுக்கு மண்டை ஓடு மற்றும் காது பகுதிகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் உடல் நலம் மீண்டு மலாலா ஜனவரி  மாதம் இறுதியில்  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இன்று பர்மிங்காமில் உள்ள பெண்கள் எட்ஜ்பாஸ்டன் உயர்நிலை பள்ளியில் தமது பாடங்களை மீண்டும் படிக்கத் துவங்கி உள்ளாள்.

இதுகுறித்து மலாலா கூறிகையில், தான் மிகவும் மகிழ்ச்சியாக உணருவதாகவும், தமது ஆசையான மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்,  பாகிஸ்தானில் உள்ள தனது பள்ளித் தோழர்களை பிரிந்ததை நினைத்து வருத்தப்படுவதாகவும், இருப்பினும் இங்கு தமக்கு புதிய நபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கிடைத்ததை எண்ணி மகிழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.