Home 13வது பொதுத் தேர்தல் அன்வார் இப்ராஹிம் தொகுதி மாறுகிறார் – பேராக்கில் போட்டியா?

அன்வார் இப்ராஹிம் தொகுதி மாறுகிறார் – பேராக்கில் போட்டியா?

640
0
SHARE
Ad

Aகோலாலம்பூர்,மார்ச்.20-  வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் டத்தோஶ்ரீ அன்வார இப்ராஹிம் பெர்மாந்தாங் பாவ் தொகுதியை விட்டு  பேரா மாநிலத்தில் போட்டியிடவுள்ளார் என நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல தவணைகள் பெர்மாந்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வந்த அன்வார் இப்ராஹிம் வரும் பொதுத்தேர்தலில் பேராக் அல்லது சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவ் தொகுதியை விட்டு அன்வார் இப்ராஹிம் மற்றொரு தொகுதியில் போட்டியிட இருப்பதை போல் மக்கள் கூட்டணி தலைவர்களும்  தங்களுக்குரிய பாதுகாப்பான இடத்தை விட்டு விட்டு, தேசிய முன்னணிக்கு சாதகமான தொகுதிகளில் அதன் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடவுள்ளனர்.

#TamilSchoolmychoice

வரும் பொதுத்தேர்தலில் மத்திய அரசாங்கத்தை கைப்பற்ற மக்கள் கூட்டணி பெரும் முயற்சி செய்து வருவதால் தொகுதி மாறி போட்டியிடும் வியூகத்தை வகுத்து இருப்பதை அறிய முடிகிறது.

கூடுதலான நாடாளுமன்றத் தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே அதுவும் தற்போது தேசிய முன்னணி கைவசம் உள்ள தொகுதிகளைக் கைப்பற்றினால் மட்டுமே  மத்திய அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதால் மக்கள் கூட்டணி இந்த புதிய வியூகத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.