சென்னை, மார்ச் 20- மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகியதையடுத்து மத்தியில் பதவியில் இருந்த திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாக ராஜினாமா கடிதம் கொடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதில் இருவேறு பிரிவுகளாகச் சென்று ராஜினாமா கடிதம் கொடுத்தது ஏன் என்று தெரியவில்லை.
ஜெகத் ரட்சகன், பழனி மாணிக்கம், காந்தி செல்வன் ஆகியோர் முதலில் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.
அவர்களுடன் செல்லாத அழகிரி மற்றும் நெப்போலியன் பிற்பாடு தனியாக பிரதமரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தது ஏன் என்பது தெரியவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பல யூகங்களுக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.