Home இந்தியா கர்நாடகாவில் மே 5ல் தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

கர்நாடகாவில் மே 5ல் தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

516
0
SHARE
Ad

img1130320037_1_1கர்நாடகா, மார்ச் 20-  கடந்த பல மாதங்களாக இழுபறி நிலையில் இருந்து வந்த கர்நாடக மாநில சட்டப் பேரவைக்கான தேர்தல் வரும் மே மாதம் 5ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் வி.சம்பத் (படம்) அறிவித்தார்.

மொத்தம் 4.18 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் கூறினார்.

ஏப்ரல் 10ம் தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவோர் மனு தாக்கல் செய்ய துவங்கலாம். மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் ஏப்ரல் 17ம் தேதி என்றும் சம்பத் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஏப்ரல்18ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். மனுவை திரும்பப் பெற ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாள் எனவும், தேர்தல் முடிவுகள் மே மாதம் 8ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் அறிவித்தார்.

தற்போது கர்நாடக முதலமைச்சராக பதவியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் சட்டர்ஜியின் பதவிக் காலம் பற்றி ஜூன் 3ல் முடிவு அறிவிக்கப்படும் என கூறினார்.

தேர்தல் அமைதியாக நடைபெற தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.