Home இந்தியா கர்நாடகா : சித்தராமையா முதல்வர் – டி.கே.சிவகுமார் துணை முதல்வர்

கர்நாடகா : சித்தராமையா முதல்வர் – டி.கே.சிவகுமார் துணை முதல்வர்

484
0
SHARE
Ad

பெங்களூரு : கடந்த மே 10-ஆம் தேதி நடைபெற்ற கர்நாடகா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.

அதைத் தொடர்ந்து இன்று சித்தராமையா கர்நாடகா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகா முதல்வரின் பதவியேற்பு விழாவுக்கு மற்ற மாநிலங்களில் இருந்து அரசியல் பிரமுகர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுனா கார்கே கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். எனவே கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றது அவருக்கும் தனிப்பட்ட முறையில் வெற்றிதான். அதற்குப் பரிசாக அவரின் மகன் பிரியங்க் மாநில அமைச்சராகி
இருக்கிறார். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் காங்கிரசின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரோடு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் கமல்ஹாசனும் கலந்துகொண்டனர்.

#TamilSchoolmychoice

வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் இந்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து விட்டார்.

இதுவரையில் சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகள் காங்கிரசின் தலைமையின் கீழ் ஒன்றுபடுவதற்கான வாய்ப்புகளை காங்கிரசின் கர்நாடகா வெற்றி சாத்தியப்படுத்தியுள்ளது.