Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘பனாஸ் டாக் வித் விகடகவி’ – தமிழ் உரை நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ : ‘பனாஸ் டாக் வித் விகடகவி’ – தமிழ் உரை நிகழ்ச்சி

678
0
SHARE
Ad

மே 19 முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் உள்ளூர் தமிழ் உரை நிகழ்ச்சி ‘பனாஸ் டாக் வித் விகடகவி’ முதல் ஒளிபரப்புக் காணுகிறது

‘பனாஸ் டாக் வித் விகடகவி’ நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்கள்:

• மே 19, இரவு 10 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் பனாஸ் டாக் வித் விகடகவி எனும் உள்ளூர் தமிழ் உரை நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

• பொழுதுபோக்கு மற்றும் பிரபலங்களின் செய்திகள், புதுப்பிப்புகள் மற்றும் கிசுகிசுக்களின் இரசிகர்கள், உள்ளூர் கலைஞர் விகடகவி மகேன் தொகுத்து வழங்கும் இந்த 13-அத்தியாய நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்ப்பார்க்கலாம். அவர் பல்வேறு உள்ளூர் கலைஞர்களுடன் நேர்மையாகப் பேசுவதோடு சமூக ஊடகங்களில் அலைகளை உருவாக்கிய அவர்களின் கடந்தக் கால மற்றும் தற்போதைய சிக்கல்களைப் பற்றித் தைரியமாக உரையாடுவார்.

#TamilSchoolmychoice

• உள்ளூர் கலைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்குடையவர்களை விருந்தினர்களாகப் பனாஸ் டாக் வித் விகடகவி சித்திரிக்கும்.

• பனாஸ் டாக் வித் விகடகவி நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு வெள்ளி இரவு 10 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

• மேல் விவரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.