Home இந்தியா கர்நாடகா தேர்தல் : 136 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

கர்நாடகா தேர்தல் : 136 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

586
0
SHARE
Ad

பெங்களூரு : கடந்த மே 10-ஆம் நடைபெற்ற கர்நாடகா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் 136 தொகுதிகளைக் கைப்பற்றி தனியாக ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ். இந்த வெற்றி அந்தக் கட்சியினரிடையே நாடு முழுவதும் உற்சாக அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்னிந்தியாவில் முதன் முதலாக பாஜக கைப்பற்றிய மாநிலம் கர்நாடகா. இப்போது அதனை இழந்து விட்டது. தமிழ்நாட்டிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியினர் அந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஸ்டாலின் இந்த வெற்றிக்கு காங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

காங்கிரசின் வெற்றிக்கான 3 காரணங்கள் :

#TamilSchoolmychoice

1. முஸ்லீம்-கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்ந்தது;

2. ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததால் ஏற்பட்ட அனுதாப அலை;

3. ஒரே கட்சியை இரண்டாவது தவணைக்கும் எப்போதும் தேர்ந்தெடுக்காத கர்நாடகா வாக்காளர்களின் மனப் போக்கு. அதனால் கடந்த முறை ஆட்சியில் இருந்த பாஜகவுக்கு மீண்டும் வாக்காளர்கள் வாக்களிக்க முன்வரவில்லை.

பாஜக 63 தொகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தென் மாநிலங்களில் ஊடுருவ பாஜக செய்யும் முயற்சிகளுக்கு கர்நாடகா மாநிலத்தின் தோல்வி பின்னடைவைத் தந்துள்ளது.

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து இனி மோடியும்-அமித் ஷாவும் தங்களின் வியூகங்களை மாற்றக் கூடும்.