பெங்களூரு – கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து தனிப் பெரும் கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாமல் தடுமாறும் பாஜகவின் சார்பில், முதலமைச்சராக நியமிக்கப்பட்ட எடியூரப்பா தனது பதவியிலிருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.
பெரும்பான்மை கிடைக்காததைத் தொடர்ந்து, சட்டமன்றம் கூடுவதற்கு முன்பாகவே, தனது பதவியிலிருந்து எடியூரப்பா விலகுகிறார்.

இதனைத் தொடர்ந்து ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ்-ஜனதா தளம் இணைந்த கூட்டணி கர்நாடகா மாநிலத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கிறது.