Home Featured இந்தியா சுஷ்மாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றி!

சுஷ்மாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றி!

901
0
SHARE
Ad

Sushma Swarajபுதுடெல்லி – சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு இன்று சனிக்கிழமை வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

எய்ம்ஸ் இயக்குநர் மிஸ்ரா தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அந்த அறுவை சிகிச்சையை நடத்தியுள்ளது.

சுஷ்மாவுக்கு உறவினர் அல்லாத ஒருவரிடமிருந்து சிறுநீரகம் தானம் பெறப்பட்டதாக எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.